2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
சமீபத்தில் பாலிவுட்டில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த அனிமல் என்ற திரைப்படம் வெளியானது. அர்ஜுன் ரெட்டி புகழ் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ள இந்த படம் வெளியான சில நாட்களிலேயே 500 கோடியை தாண்டி வசூலித்து வெற்றி படமாக மாறி உள்ளது. இந்த படத்தை பற்றி பல ஹீரோக்கள் குறிப்பாக தெலுங்கு திரை உலகை சேர்ந்த மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், நானி ஆகியோர் சிலாகித்து தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
அதே சமயம் திரிஷா உள்ளிட்ட ஒரு சில நடிகைகள் இந்த படத்தை புகழ்ந்து கூறியபோது அவர்களுக்கு எதிர்மறை பதில்கள் தான் கண்டனங்களாக கிடைத்தன. இந்த நிலையில் நடிகர் நானி, அனிமல் படம் பற்றி சமீபத்தில் கூறும்போது, “இந்த படத்தில் ரன்பீர் கபூரின் உருமாற்றம் பார்த்து அசந்து விட்டேன். இனி இது போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதற்கு நானும் தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.